அசர வைக்கும் அம்பானியின் தொலைநோக்கு திட்டங்கள்

புதுடில்லி : ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, தனது ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சக்தியை பயன்படுத்தி கல்வி, சுகாதாரம், சிறு தொழில்கள், ஆன்லைன் வணிகம், பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளை நீண்ட கால நோக்கில் ஆள்வதற்கு திட்டம் வகுத்து உள்ளார். அத்திட்டத்தின் ஒரு முன்னேற்றம் தான் பேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் என்கின்றனர்.



ஜியோ நிறுவனத்தின் சுமார் 10% பங்குகளை பெற்று, ரூ.43,574 கோடியை முதலீடு செய்யப் போவதாக பேஸ்புக் புதனன்று தெரிவித்தது. இதன் நோக்கம் 6 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், 12 கோடி விவசாயிகள், 3 கோடி சிறு வணிகர்கள் மற்றும் முறைசாரா துறையில் உள்ள லட்சக்கணக்கான சிறு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்குவது என பேஸ்புக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.